சரோசு கமலு பங்கசு

சரோசு, கம்மலு, பங்கசு இங்க மூணு பேரும் வாங்க. யாரு வந்திருக்காங்கன்னு வந்து பாருங்க.
☺☺☺☺☺
யாரப் பாட்டிம்மா கூப்பறீங்க?
☺☺☺☺☺☺☺☺☺
@@@@@@
அடியே செல்லம்மா எம் பேரப் புள்ளைங்களத் தாண்டி கூப்படறேன்.
☺☺☺☺☺☺☺☺
@@@@@@@
அதென்ன சரோசு, கம்மலு, பங்கசு? காதுல மாட்டற கம்மலக்கூடப் பேரா வச்சது நல்லா இல்லீங்க பாட்டிம்மா. யாரு இந்தப் பேருங்கள உங்க பேரப்பிள்ளைங்களுக்கு வச்சாங்க? மாமனா?
☺☺☺☺☺☺☺☺☺☺
@@@@@@
ஆமாண்டி செல்லம்மா. ஒலகம் போற போக்குதலதானே போயாகணும். இப்ப நம்ம தமிழருங்க ஆரும் அவுங்க பிள்ளைங்களுங்களுக்கு தமிழ்ப் பேருங்கள வைக்கற பழக்கம் இல்ல. எல்லாரும் இந்திப் பேருங்களத்தானே வைக்கறாங்க. நாம மடடும் தமிழ்ப் பேர வச்சா வித்தியாசமா போயிடாதா?
☺☺☺☺☺☺
@@@!!!
ஆமாம் பாட்டிம்மா காலத்தோட ஒன்றிப் போறதுதான் நமக்கு நல்லது. தமிழ் வளர்ச்சித் துறைன்னு ஒண்ணு இருக்கறதாச் சொல்லறாங்க. அந்தத் துறையோட வேலை என்னான்னு தெரில. இதுல வேற தமிழ்ப் பேரு உள்ள சினிமா படத்துக்கெல்லாம் சலுகை வேற தர்றாங்களாம். கலப்படத் தமிழையும் சென்னை 'செந்தமிழ்'ஐயும் உலகம் முழுவதும் பரப்பர அருஞ்சேவைக்கு. வாழ்க தமிழ்த் தாய் 'நாமம்'.
☺☺☺☺☺☺☺☺😊😊😊😊😊😊😊😊😊
@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க; மொழிப்பற்றை வளர்க்க.
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
கமல், சரோஜ், பங்கஜ் = தாமரை

எழுதியவர் : மலர் (6-Jan-17, 4:34 pm)
பார்வை : 115

மேலே