பல விகற்ப பஃறொடை வெண்பா இன்றுநான் காணொளியில் கண்டதோர் காட்சியெனைக்

பல விகற்ப பஃறொடை வெண்பா ..

இன்றுநான் காணொளியில் கண்டதோர் காட்சியெனைக்
கண்கலங்க வைத்ததே; நல்லிரவில் பெண்ணொருத்தி
வந்த வழிமறித்து கட்டிப் பிடித்தொருவன்
கன்னத்தில் முத்தமிட்டு கூடவந்த மாற்றான்
மடிகிடத்தி அல்பசுகம் கொண்டாங்கு வீதியில்
தள்ளிவிடக் கண்டு சபித்தேன் ஒருமனதாய்
புற்றுநோயால் சாகக் கட !

04-01-2017

எழுதியவர் : (6-Jan-17, 5:09 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 33

மேலே