பல விகற்ப பஃறொடை வெண்பா ஒற்றுமையு ணர்வுடன் வாழ்கின்ற மக்களின்
பல விகற்ப பஃறொடை வெண்பா
ஒற்றுமையு ணர்வுடன் வாழ்கின்ற மக்களின்
ஒற்றுமை சீர்குலைக்க எத்தனையோ காணொளிகள்
சுற்றும் முகநூல் பதிவுகளைக் கண்டுவிடின்
மற்றினத்தார் பற்றியே குற்ற முரையாமல்
நல்லிணக் கத்துடன் எல்லோரும் ஓர்குடும்பம்
என்றுகூறி வாழ்வோம் இனி
04-01-2017