விளக்கா ஒளியா

என்னடா தம்பி ஏழுமலை, பாப்பாவுக்கு 'விளக்கு' -ன்னா பேரு வச்சிருக்கற?
☺☺☺☺☺☺☺
இல்ல அண்ணே, பாப்பா பேரு தீபா.
☺☺☺☺☺☺☺☺☺☺☺
அந்தப் பேருக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா?
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
தெரியாதண்ணே. நெறையப் பேரு அந்தப் பேர அவுங்க பொண்ணுங்களுக்கு வைக்கறதப் பாத்துட்டுத்தான் நா எம் பொண்ணுக்கு தீபா - ன்னு பேரு வச்சேன்.
☺☺☺☺☺☺☺☺☺
தீபா -ன்னா 'விளக்கு' 'ஒளி' -ன்னு அர்த்தம்டா.
☺☺☺☺☺☺☺☺☺
நல்ல வேள அண்ணே, அவகூடப் படிக்கற பொண்ணுங்க யாருக்கும் அந்தப் பேரோட அர்த்தம் தெரியாது. தெரிஞ்சா அவளக் கிண்டல் பண்ணுவாங்க.
@@@@@@
அப்ப, விளக்கு, ஒளி - ன்னெல்லாம் தமிழ்ப் பேர வச்சாக் கேவலம். அதே அர்த்தங்கள் உள்ள இந்திப் பேர வச்சா கவுரவம். பரவால்லடா தம்பி உங்க தாய் மொழிப் பற்று.

எழுதியவர் : மலர் (7-Jan-17, 2:43 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 127

சிறந்த நகைச்சுவைகள்

மேலே