மணவாழ்வில் கிடைப்பது நல்ல மனைவி - கவியரங்கம்

தமிழ்வணக்கம்:-

காவியம் படைத்திடும் தமிழே -- எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்


தாய்மொழி நன்றாம் பேசுதல் கேட்டல்
----- தமிழ்மொழி சுகந்தரும் காண்க !
வாய்ப்பது வந்த போதினில் தோழா
----- வகையுற மொழியினைப் பேசு !
நோய்விழும் நேரம் நோக்கினும் மருந்தாம்
------ நோய்பிடி அகலுமே நம்பு !
காய்ந்ததோர் நெஞ்சம் கருவறை என்றே
----- காவியம் படைத்திடும் தமிழே !


அவையடக்கம் :-

நிலாமுற்றம் முகநூலில் நிறைவாகக் கவியரங்கம்
உலாவரவும் செய்கின்றோம் உவப்பில்லா உவகையினால்
பலாக்கனியைப் போன்றதொரு பல்சுவையைத் தருகின்ற
நிலாமுற்றம் கவியரங்கம் நீடுழியும் சிறந்திடவே !!!!


தலைமை வணக்கம் :-

முற்றத்தின் தலைமை போற்றி -- இன்று
கற்றதன் பலனை ஏற்றி -- தினம்
பற்றுடன் வாழ்ந்திட வேண்டும் -- உயர்
உற்றதும் சேர்ந்திட உன்னதம் வேண்டும்


மணவாழ்வில் கிடைப்பது - நல்ல மனைவி .
இன்னிசை வெண்பாக்கள் .


மனைவி அமைவதெல்லாம் மாசிலா மண்ணின்
வினையாம் தினந்தோறும் வீட்டினி லின்பம்
துணையால் வருகிற தூய்மை அனைத்தும்
மனையாள் முகத்தின் மரபு .


மாற்றங்கள் வேண்டும் மகத்துவமா யில்லறத்தை
போற்றுங்கள் நெஞ்சத்தில் பொன்றாது நின்றிடவும்
சாற்றுங்கள் மொத்தமாய் சாட்சியாம் காதலை
ஏற்றுங்கள் தீபத்தை ஏற்று .


எழிலாய் மனங்குளிர ஏற்றமிகு இல்லம்
அழிவே இனியில்லை ஆக்கத்தில் எங்கும்
பொழிலாய் மனையாளும் போந்திடுவாள் நாளும்
விழியாய் கனவில் விருந்து


மரபின் மனமே மனைவியின் உள்ளம்
தரத்தில் சிறப்பாம் தருகிற உண்மை
உரமாய் இருப்பாள் உறவாய் வருவாள்
சிரமாய் அவளது சீர் .


நன்றியுரை:-

நன்றிகள் சொல்லிடு வேன் -- நாடு
நன்மைகள் பெற்றிட வேண்டிடு வேன்.
நன்னெறி சொல்லிடும் முற்றம் -- நாளும்
நல்கியும் பல்கியும் வேண்டிடும் சுற்றம் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (7-Jan-17, 10:49 pm)
பார்வை : 66

மேலே