பொதுத்துறை வங்கிகளின் அலட்சியமும் மக்களின் அவதியும்

பொதுத்துறை வங்கிகளின் அலட்சியமும் மக்களின் அவதியும்
வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதின் நோக்கமே வங்கிசேவைகள் தேசத்தின் அணைத்து மக்களையும் எட்டவேண்டும் என்பதால் தான் ஆனால் நடைமுறையில் இருப்பது என்ன ? அரசின் லட்சியம் நிறைவேறியதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணியாற்றுபவர்கள் மன நிலை போக்கு எவ்வாறு உள்ளது என்றால் அவர்கள் ஏதோ வானத்தில் இருந்து வந்தவர்கள் போலவும் பொது மக்கள் என்னவோ அவர்கள் கருணையிலும் தயவிலும் இருப்பவர்கள் போலவும் நடத்த தொடங்கிவிட்டார்கள்
இவர்கள் சேவை செய்வது யாருக்கு என்றால் ஒரு ஊரின் செல்வாக்கு பெற்றவர்கள் அரசியல் வாதிகள் செல்வந்தர்களுக்கு மட்டும்தான் சிறு வணிகர்களுக்கோ நடுத்தர மக்களுக்கோ நெசவாளர்களுக்கோ சிறு விவசாயிகளுக்கோ இல்லை என்று தான் சொல்ல வேண்டும்
இந்தவங்கிகள் தரும் விளம்பரங்களை நம்பி ஒரு நடுத்தர வசதி படைத்த வாடிக்கையாளர் வீட்டுக்கடன் வாகனக்கடன் ,கல்விக்கடன் , போன்றவற்றுக்கு சென்றால் அங்கு அவர்க்கு கிடைக்கும் மரியாதை இருக்கிறதே அதை வார்த்தைகளில் வடிக்க முடியாது கடனுக்கு மட்டும் தான் இந்த மரியாதை என்று எண்ணாதீர்கள் கணக்கில் பணம் செலுத்தும் போது வங்கி வரைவோலை எடுக்க முயற்சிக்கும் போதும் தன சொந்த கணக்கில் இருந்து பணம் எடுக்கும் போதும் இதே மரியாதை தான்
பணம் செலுத்து சீட்டில் நாம் ருபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை எழுத மறந்து விட்டாலோ அல்லது எழுத தெரியாத பாமரன் வந்து விட்டாலோ அவ்வளவுதான் அந்த பரிவர்த்தனை நடக்க படாத பாடு படவேண்டும் இந்த ஒரு சிறிய உதவியை கூட செய்யமறுக்கும் அளவிற்கு இந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் சேவையின் தரம் உள்ளது
அரசு ஒய்வு ஊதியம் பெறும் மூத்த குடிமக்களின் நிலையோ இன்னம் கவலைக்கிடம் அவர்களை எந்த அளவுக்கு இழுத்தடிக்கமுடியுமோ அந்த அளவுக்கு அலைக்கழிக்கும் இந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வீதிகளில் போராடுகிறது
ஏன் தெரியுமா ? வங்கிகள் தனியார் மயமாக்கப்படலை எதிர்த்து நடக்கிறதாம் . தனியார் மயமாக்கினால் தற்போது சேவை செய்வது போல மக்கள் பனி செய்ய முடியாதாம் அதனால் வீதிகளில் வந்து போராடுகிறார்கள் என்று கூறுகின்றனர்
உண்மை இதுவா? எனில் இல்லை என்பதே விபரம் தெரிந்தவர்களின் கூற்று தனியார் மயமானால் இவர்கள் வாடிக்கையாளர்களை மதித்தே தீர வேண்டும் வாடிக்கையாளர்களின் குறைகளை உடனுக்குடன் சரி செய்தே தீரவேண்டும் இப்போது உள்ளது போல் 10 மணிக்கு வேலை தொடங்க வேண்டிய வங்கிகள் 10 மணிக்கு திறப்பதும் 1020 மணிவரைக்கும் செயல்பாடுகளை தொடங்காமல் காலம் தாழ்த்துவதும் வாடிக்கையாளர்களை நோகடிப்பதும் முடியாமல் போய்விடும் நினைத்த பொது வேலை நிறுத்தம் செய்ய முடியாமல் போய்விடும். அவசர தேவைகளுக்கு பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்களை தவிக்க விடும் போக்கு இல்லாமல் போய்விடும்
குறிப்பாக வங்கிஊழியர்கள் குறித்த நேரத்திற்கு வந்து பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டு விடும் திறமை உள்ளதோ இல்லையோ வருடா வருடம் ஆண்டு ஊதிய உயர்வு // பதவி உயர்வு // சலுகைகள் இவைகள் கிடைக்காமல் போய்விடும் உண்மையாக உழைக்கவேண்டிய சூழல் ஏற்பட்டு விடும் . திறமையுடன் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு விடும் .
இவைகளுக்கு தான் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தமிழக வங்கி ஊழியர்கள் சம்மேளனம் போன்றவை வீதிகளுக்கு வந்து போராடுகின்றனர் இவர்களுக்கு பொது மக்களின் ஆதரவு கிடைக்குமா என்றால் கண்டிப்பாக கிடையாது .
இவர்களின் போராட்டத்திற்கு பொது மக்களின் ஆதரவு கிடைக்க வேண்டுமாயின் அணைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் நல்ல முறையில் மதித்து அவர்களுக்கு உரிய சேவையை செய்யட்டும் .பொது மக்களுக்கு சேவை செய்யட்டும் அப்போது பொது மக்களே இவர்களின் போராட்டத்திற்கு முன் வந்து போராடுவார்கள் . இவர்கள் அரசையும் மதிப்பது இல்லை அரசின் சட்ட திட்டங்களையும் மதிப்பதில்லை வாடிக்கையாளர்களையும் மதிப்பதில்லை பொதுமக்களையும் மதிப்பதில்லை .இவர்கள் யாருக்கு போராடுகிறார்கள்?
உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன் ?

எழுதியவர் : ச ரவிச்சந்திரன் முதுகலை ப (8-Jan-17, 5:16 pm)
பார்வை : 167

மேலே