கல்வித்துறையை மீட்பீர்

கல்வித்துறையை மீட்பீர்

அன்பார்ந்த தோழமை நெஞ்சங்களே தற்போது கல்வித்துறை களங்கப்பட்டு சிறைப்பட்டு கிடக்கிறது கல்வி கொள்ளையர்களின் கையில் அகப்பட்டு அடிமைப்பட்டு கிடக்கிறது. அரசோ இதை பற்றி கவலை படவில்லை. அரசு சாரா தன்னார்வலர் குழுக்களும் இத்துறையை கை விட்டுவிட்டது

கோடிக்கணக்கான ரூபாய்கள் புரளும் இத்துறையை கைப்பற்றிய தனியார் கல்வி கொள்ளையர்களோ நம்மை சுரண்டி சுரண்டி கொழுத்த பணமுதலைகள் ஆகிவிட்டனர் இவர்கள் எப்படி சுரண்டுகிறார்கள் தெரியுமா ? மாணவர்கள் கட்டணம் நன்கொடை என்ற பெயரில் கொள்ளை அடிப்பதோடு ஆசிரியர்களின் உழைப்பை மிக மிக குறைந்த சம்பளம் கொடுத்ததும் சுரண்டி வருகின்றனர் L K G க்கு ஆயிரக்கணக்கான ருபாய் கட்டணம் வசூலிக்கும் கல்விக்கொள்ளையர்கள் கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரைகளை ருபாய் 5000 6000 சம்பளத்தில் அவர்கள் உழைப்பையும் உறிஞ்சுகின்றனர் இதை அரசு பள்ளி கல்வி இயக்குனரோ ஆய்வாளர் மெட்ரிக் பள்ளி கல்வி இயக்குனரோ ஆணையர் தொழில்நுட்ப கல்வி துறையோ பல்கலை கழக அலுவலர்களோ அகில இந்திய தொழில்நுட்ப குழு தணிக்கையாளர்களோநிர்வாகங்கள் செய்யும் தவறுகளை மூடி மறைக்கவே உதவுகிறார்கள் ஆனால் ஆசிரியர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை பெரிதுபடுத்தி அதை மட்டும் ஆய்வறிக்கையில் எழுதிவிட்டு செல்கின்றனர் தனியார் கல்வி கொள்ளையர்களை கண்டு கொள்வதே இல்லை
எல்லாம் நம் உழைப்பு நாம் அனுபவிக்க வேண்டிய நம்முடைய பணம் ஆனால் இவற்றை கைப்பற்றிய கல்விக்கொள்ளையர்களோ தான் வலுப்பெற்று தன்னை காப்பாற்றிக்கொள்ள ஊழல் அரசியல் வாதிகளை ஆதரித்து இந்த தேசத்தையும் இளைய தலைமுறையையும் பாழ் படுத்திவருகின்றனர்

அரசு ஒருபோதும் தனியார் கல்விக்கொள்ளையர்களை அடக்கபோவதும் இல்லை கல்வித்துறையை மீட்கப்போவதும் இல்லை இதற்க்கு வழிதான் என்ன ?
கேள்விகளை எழுப்புங்கள் நீதிமன்றங்களை நாடுங்கள் அரசின் கவனத்தை ஈர்த்து கல்விக்கொள்ளையர்களின் கொள்ளையை அம்பலப்படுத்துங்கள் ?
அக்கினி குஞ்சொன்றை கண்டேன் அதை
அங்கோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு என்ற பாரதியின் கவிதை வரிகளுக்கேற்ப
இயக்குனர் சமுத்திரக்கனி என்றோர் தமிழ் இயக்குனரின்
" அச்சமின்றி " மக்களின் பிரச்சினைகளை மக்களிடம் கொண்டு செல்லும் துணிச்சலான முயற்சியை கண்டாவது விழிப்படைவோம்

கல்வியாளர்களை அவமதிக்கும் எந்த ஒரு தேசமும் முன்னேறவே முன்னேறாது கல்வியை விற்கும் கயவர்கள் இருக்கும் வரை நாம் முன்னேற முடியவே முடியாது

தடுப்போமா? கல்விக்கொள்ளையர்களின் கல்வி கொள்ளையை விழிப்போமா இந்த கணம் முதலாவது ?


Close (X)

5 (5)
  

மேலே