அழகாரம்

அழகாரம்

வண்ணங்களுக்கு இனிமை சேர்க்கும் கால் நகங்கள்
கடற்கரையை அழகாக்கும் பாதங்கள்
பல வண்ணங்களைக்கொண்ட மயில் இறகின் அழகோடு போட்டி போடும் இரு வண்ணங்களைக்கொண்ட அவளின் வேல் விழிகள்
என் இளமை பருவத்தை இளமையாக்கும் அவள் புருவங்கள்
வார இதழ்களில் வரும் தொடர்களை விட சுவாரஸ்யமான செவ்விதழ்கள்!!
தங்க சங்கிலியே பொறாமைப்படும் கழுத்து ......

இவையெல்லாம் தான் அழகா ???????

இல்லை இல்லை ....

குழந்தைகளிடம் அவள் கொஞ்சும் தாய்மையின் ஸ்பரிசம் அது அழகு...!
தந்தையிடம் அவள் செய்யும் மழலை குறும்புகள் அழகு...!
எனக்காக செய்யும் சமையலிலும் அவளது வாசம் அழகு...!
தம்பிகளுக்காக கல்வி துறந்த தியாகம் அது அழகு...!
எனக்காக எல்லோரையும் துறந்த துணிச்சல் அழகு...!
என் கெஞ்சலின் பிறகு அவளது கொஞ்சல் அது அழகு...!
அவள் நினைவில் வாழ்ந்தால் தனிமை கூட அழகு ...!
அவளுக்காக வாழும் வாழ்க்கை அது அழகு !
அவளின் மடியில் இறந்தால் மரணம் கூட பேரழகு ...!

இதையெல்லாம் கேட்ட பிறகு "கவிதையில் கூட எனக்கு பொய்கள் பிடிக்காது" என்று சொன்ன நேர்மை அழகோ அழகு.....!!!


Close (X)

0 (0)
  

மேலே