ஏழையின் விழும்புகள்

உடைந்து விடும்
பாறைகள்
அழிந்து விடும்
மனிதனால் உருவாக்கப்பட்ட
சாதனங்களால் உடைந்துவிடுகின்றது இன்று.


பாலடைந்த வாழ்க்கையில்
ஒருவாய்க்கு நான்
உழைக்க வேணும் என்று
பாடுபடுபவன் இந்த ஏழை.


சாதனங்களை சாய்த்துவிட்டு
ஏழையின் கைகளை
காம்பு பிடிக்க வைக்கும்
முதலாளிகளுக்கு எங்கு
தெரியும் ஒரு வேலைக்காக உழைக்கும் இந்த
ஏழையின் பாடு.



புத்தகம் தூக்கும்
கைளில்
கூடைகள் தூக்கும்
காலமாய் மாறிவிட்டது ஏழையாய் பிறந்தால்.


கால்களை காப்பத்திட
பாதணிகலாம்.
பசியால் வாடிய போது
எவனோ.. வீசிய
பாதணிகள் கிடைத்தால்......


பணம் உள்ளவன் குணம் உள்ளவனாய்
நடிப்பான் இன்று.
பணமில்லாது குணம்
உண்டு என்று உழைப்பவன்
பலர் உண்டு என்றும்.



பசித்திடும் போது
ருசித்து ருசித்து
உண்ணுபவன் ஏழை.
பசித்திடும் போது சலிப்புடன்
உண்ணுபவன் பணக்காரன்.
என்று தெரிகின்றதா மானிடங்களே.


மாடி விட்டில் வாழும்
மானிடங்களே
ஓலைக் குடிசையின்
வாசனைகளை நுகர்ந்து இருக்கின்றீர்களா
சொல்லுங்கள்.?


எத்தனை பேருக்கு தெரியும்
உணவுக்காய் உழைக்கும்
எழைகளையும்
கௌரவத்துக்காய் உழைக்கும்
பணக்காரர்களையும்....!




நினைவில் வைத்தபடி
வாழுங்கள் மானிடமே..........



பொத்துவில் அஜ்மல்கான்
இலங்கை.

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (11-Jan-17, 9:28 am)
பார்வை : 73

மேலே