கண்களைக் காணும் பயிற்சி

முகநூலில் அவள் புகைப்படத்தில்
உள்ள கண்களை பார்த்து
நேரில் அவள் கண்களை எதிர்கொள்ளும்
பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கின்றேன்.
அவள் கடக்கும்போது கல்போல இருந்து
அந்த கண்களைக் காணும் துணிவில்லாமல்
தலை திருப்பும்போது உணர்ந்தேன் இன்னும்
அந்த பயிற்சியில் நான் தேறவில்லை என்றும்
எப்போதும் தேறப்போவதுமில்லை என்றும்.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (11-Jan-17, 10:32 am)
பார்வை : 144

மேலே