லால் பகதூர் சாஸ்திரி

3வது இந்தியப் பிரதமர்

பதவியில்
ஜூன் 9, 1964 – ஜனவரி 11, 1966

முன்னவர்
குல்சாரிலால் நந்தா

பின்வந்தவர்
குல்சாரிலால் நந்தா

தனிநபர் தகவல்


பிறப்பு
அக்டோபர் 2, 1904
முகல்சாரி, உத்தரப் பிரதேசம்

இறப்பு
ஜனவரி 11, 1966
தஷ்கந்த், சோவியத் ரஷ்யா

அரசியல் கட்சி
இந்திய தேசிய காங்கிரஸ்

சமயம்
இந்து சமயம்

லால் பகதூர் சாஸ்திரி (அக்டோபர் 2, 1904 - சனவரி 11, 1966) இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். இவர் ஒரு முக்கியமான விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். இவர் முறையாகத் தெரிவு செய்யப்படும் வரை குல்சாரிலால் நந்தா 14 நாட்கள் இடைக்காலப் பிரதமராக இருந்தார். இவர் பதவியேற்று 2 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, சோவியத் ஒன்றியத்திலுள்ள தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது காலமானார்.
பொருளடக்கம் [மறை]

எழுதியவர் : (11-Jan-17, 10:12 pm)
பார்வை : 136

மேலே