பொங்கலோ பொங்கல்

பொங்கலோ! பொங்கல் !

தோழமை நெஞ்சங்களுக்கு ஒரு வேண்டுகோள் யோசிப்பீர் இந்த கணம் நமது தேவை என்ன ? தண்ணீரின்றி இதுவரை நூற்றுக்கணக்கான விவசாயிகள் தான் படாத பாடு பட்டு செய்த பயிர் வாடியது கண்டு மாய்ந்து போனதை கண்டு நெஞ்சம் பதை பதைக்கிறது
இது வெறும் சோக நிகழ்வு மட்டுமல்ல நம்முடைய தேசத்தின் அழிவின் ஆரம்பமாகவும் எடுத்துக்கொள்ளவேண்டும் இந்த நிகழ்வுக்கு ஓர் முற்று புள்ளி வைத்தாக வேண்டும் அதற்க்கு நாம் என்ன செய்ய முடியும் ? அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
நம்முடைய அங்கலாய்ப்பை அரசின் மீது சுமத்தி விட்டு நாம் அடுத்த தொலைக்காட்சி நெடுந்தொடரையோ அல்லது கிரிக்கெட் ஒளிபரப்பில் ஆழ்ந்து போகிறோம்

இந்த நிலை தொடர்ந்தால் தமழகத்தில் தண்ணீர் ஓர் அரும்பொருளாகி அருங்காட்சியகத்தில் தேடு பொருளாகிவிடும் எனவே கை கொடுப்பீர்
தமிழகத்தை காப்போம் அதற்கான முயற்சிகளும் அவற்றால் கிடைக்கும் பலன்களும் இங்கு பார்ப்போம்

தமிழகத்தை வறண்ட பாலை யாக்கும் கருவேல மரங்களை அழிக்கும் பணியில் எல்லோரும் ஒன்றிணைவோம் நாம் ஒவ்வொருவரும் நம் வீட்டுக்கருகில் இருக்கும் கருவேலமரங்களை நம்மருகில் இருக்கும் நண்பர்கள் உதவியோடு அடியோடு அழிப்போம் இதை ஓர்இயக்கமாகவே நாம் கொள்வோம் சினிமா அரங்குகளில் கழிக்கும் மணி நேரங்களில் , கிரிக்கெட் பந்தயங்களை காண்பதில் கழிக்கும் மணி நேரங்களில் அரட்டை அடிக்கும் மணிகளில் ஒரு சில மணி நேரங்களை ஒதுக்கினால் போதும் எல்லோரும் ஒரே நேரத்தில் ஒன்று கூட வேண்டும் என்று எண்ணாதீர்கள் அவரவர்க்கு வசதிப்படும் நேரத்தில் இந்த பணியை செய்து வரு வோம் நாம் வசிக்கும் மண்ணின் வறட்சியை போக்கி ஈரம் வார்ப்போம்

நம் வீட்டுக்கு அருகில் தெருவுக்கருகில் ஊருக்கருகில் கிராமத்தில் நகரத்தில் இருந்தும் தூர்ந்து வரும் நிலையில் உள்ள நீர் நிலைகளை
ஒன்று கூடி தூரெடுக்கும் பணியில் ஈடுபடுவோம் அரசு மட்டுமே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று எண்ணும் நமது மனோ பாவத்தை மாற்றிக்கொள்வோம்

நம் வீட்டின் கிணற்றைமூடும் தவறை இனியும் செய்ய வேண்டாம் நீர் ஆதாரங்களை பெருக்கிடவிட்டாலும் அழிக்காமல் இருப்போம் இருக்கின்ற நீர் நிலைகளை பாது காக்க நம்மால் ஆன பணியாக நம் உழைப்பில் சில மணிநேரங்களை செலவிடுவோம்

பொங்கல் திருவிழா கொண்டாடுவோம் வீறு கொண்டு ஏறு தழுவுவோம் நம் வீரத்தை மாநிலமெங்கும் கொண்டாட செய்வோம்
நம் மண்ணின் ஈரம் காக்கும் பணியில் ஒவ்வொருவரும் ஒன்றிணைவோம்

பொங்கலோ பொங்கல்

எழுதியவர் : ச ரவிச்சந்திரன் கல்வியாள (12-Jan-17, 7:14 am)
பார்வை : 394

சிறந்த கட்டுரைகள்

மேலே