சிவம்

சிவம் என்றோம் ஜீவன் துடித்தது
தவம் என்றால் சிவமே என்றது
பஞ்சஅட்சரம் சொல்லும்போது
பாரபட்சம் நமக்கேது
ஐந்து எழுத்து உலகாளும்
நமசிவய எனும் பஞ்சஅட்சரம்
இல்லாத நாம் ஏது...

ஊழ்வினை இல்லாத
ஒரு மனிதன்
இங்கேது
உலகாளும் தவமான
சிவன்  கண் நீ பாரு
உட்காறு சிவனே தவம் என
நீ பாடு
நீதி வினை சிவனோடு
மீதிவினை
அவன் நாடு.....

ஊழ்வினை தீராது ஒரு நாளும்
சிவன் தனை நெருங்கினால் நமேக்கேது....
கள்ளம் இல்லா மனதோடு கவி பாடு
செவிசாய்க்கும் சிவன் அருள் நீ தேடு

சித்தர்கள் சிவனோடு கலந்திருக்க
சிந்தை தவறா நெறியோடு சிவன்
அருள் நீ நாடு....
பிறவா பெருவரம்
நம் நினைவோடு
பிறவி தீர்த்த மனிதன் இங்கேது..

ஜூவன் சமாதியில் உடல்கிடக்க
சிவனே நம் துணை சொல்லும்
இடுகாடு...
சாம்பலில் சர்வ சிவனாய் அவன்இருக்க ....
நாம் இவ்வுலகில் நிலையேது
ஒருபோது....

நிலை பெறா உடலை சிவனில்
நாம் கலக்க
அவன் அருள் போதும் நாம் 
இறக்க
ஜீவன் தடுமாறா நிலை கொள்ளும்
சிவன் தனில் கலந்துவிட்டால்

உயிர் சற்று இளைப்பாறும் உடல்
தனில் பிரிந்து விட்டால்
நமசிவய என வாசி பிரிந்தால்
நலம் தரும் உயிர்கலுக்கே...
நமசிவய எனும் பஞ்சஅட்சரம்
பலமான வாழ்வு தரும்
தினம் நிச்சயம்....

எழுதியவர் : சிவசக்தி (13-Jan-17, 8:46 am)
சேர்த்தது : தனஜெயன்
பார்வை : 181

மேலே