வளமான பொங்கல்

பொங்கு வளம் பொங்கட்டும்
மங்களம் வாழ்வில் சேரட்டும்
செல்வ வளங்கள் கொழிக்கட்டும்
உழவன் மனம் குளிரட்டும்
அமுதாகும் அன்னம் படைக்கட்டும்
மண்ணின் ஆயுள் நீடட்டும்
பயிர்கள் ஓங்கி தழைக்கட்டும்
எங்கும் அமைதி தங்கட்டும்
காளை கன்று செழிக்கட்டும்
வீரமிக்க ஜல்லிக்கட்டு தொடரட்டும்
இயற்கை வேளாண் பெருகட்டும்
மனிதன் ஆரோக்கியம் கூடட்டும்
புவியில் வெட்பம் தனியட்டும்
மாரி மறவாமல் பொழியட்டும்
நஞ்சை புஞ்சை செழிக்கட்டும்
மரபுகள் மண்ணில் நிலைக்கட்டும்
பண்பாடு பசுமையாய் ஒளிரட்டும்
எதிலும் அழகு மிளிரட்டும்
மனித வாழ்க்கை இனிக்கட்டும்
இன்பமும் நட்பும் கூடட்டும்
பொங்கலோ பொங்கல் பொங்கட்டும்
மனங்கள் மகிழ்ச்சியில் திளைக்கட்டும்
இனிய தைத் திருநாள்
நல் வாழ்த்துக்கள்

எழுதியவர் : அருண்மொழி (13-Jan-17, 10:33 pm)
சேர்த்தது : அருண்மொழி
Tanglish : VALAMANA pongal
பார்வை : 178

மேலே