திமில்
திமில் பிடிக்கும்
திமிர் பிடித்த கூட்டமிது,
பூக்களுக்குள்
புயலடைத்த பூமி இது,
காலம் மாறினாலும்
காலங்காலமாய் மாறாத
மண் இது,,
மாற்ற இயலுமா?
மாறத்தான் முடியாமா?
காளை அடங்கும் கைகளை
காவல் தடுக்க முடியுமா?
சட்டம் இல்லா காலத்திலேயே
வட்டம் போட்டு வாழ்ந்தவர் நாங்கள்
நீங்கள்
திட்டம் போட்டு
சட்டம் போட்டால்
கட்டுப்பட்டு விடுவோமா?
ஏறுதழுவும் காளை நாங்கள்,,,,
முடிந்தால்
எங்கள் திமிலை பிடித்து
அடக்கி போங்கள்