குரும்பலூர் பொங்கல் விழா அழைப்பு

ஓடித்திரிந்த இளங்காளைகளெல்லாம் ஒன்றுகூடி
தேடியமைத்த தமிழர் அமைப்பை வழுப்பெருக்கவே வந்திருக்கின்றது...

சிவன்கோவில் திடலினிலே திரண்டு வந்த காளைகளே
முரண்பாடு கொண்டவரிடமும் முகமலரச் செய்திடுங்கள்...

கொஞ்சிக் கோலமிடும் தோகைமயில்களே அவர்களைக்காண
கெஞ்சிக் கூத்தாடும் முற்றத்துக் காளைகளே...!

கோட்பாடற்றுக்கிடந்த மழலையர்தம் விளையாட்டுகளையெல்லாம் மேம்படுத்த
கோவில்வாசலிலே நம் குழந்தைகளை பங்கேற்கச் செய்திடுங்கள்...

தத்தித்தாவும் தாவணிக் குயில்கள் அங்கே தாளங்களுக்கு நாட்டியமாடும்
முட்டிமோதும் முயல்குட்டிகளும் களத்திலிறங்கி பலகாவியங்கள் படைக்கும்...

விடியலில் துவங்கும் விளையாட்டுப் போட்டிகள்
விட்டில்பூச்சிகள் ஒளிரும் நேரமதில் அதற்கான பரிசளிப்பு...

சிறப்பிக்கத் திரண்டுவர வேண்டுகிறோம் சிங்கங்களே
சிரம்குன்றா குரும்பலூர்வாழ் சிறுத்தைகளின் அங்கத்திலொருவனாய்...

நன்றியுடன்...

- கௌதமன் நீல்ராஜ்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (15-Jan-17, 9:55 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 35

மேலே