நீதியைத் தேடி

இல்லாத ஒன்றைத் தேடுவது தானே மனித இயல்பு
நீதியும் இங்கு இல்லாமலே போனதோ..

தேவையில்லா வஞ்சனைகள் எல்லாம்
புற்றாய் வளர்ந்திருக்கும் போது..
நீதி புயலாய் அடித்து களைப்பது தானே முறை..

ஆனால் அதுவோ
தென்றலாய் தவழ்ந்து கொண்டுள்ளது
இருந்தும் இல்லாதது போல்
ஒரு வேசம் போட்டுள்ளது

இல்லாதோருக்கு அது இல்லாமலே போய்விட்டது
இருப்போருக்கோ காலடியில் கிடக்கிறது

நீதியின் பிடி இறுக்கும் போதுதான்
நல்லவர்கள் நடமாட முடியும்..
இங்கு நல்லவர்கள் நடமாட வழியே இல்லை
ஏனெனில் நீதிப்பெண்
கண்களைக் கட்டிக்கொண்டு
அவர்கள் கைக்கு எட்டாத் தூரத்தில்
ஒளிந்து கொண்டுள்ளாள்..

அழைப்போரின் குரலோ
அழுவோரின் கண்ணீரோ
அவளை அசைக்கப் போவதில்லை..
ஏனெனில் அவளுக்கு ஜீவனுள்ளதா இல்லையா என்பது
அவளுக்கே மறந்து போய்விட்டது...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (17-Jan-17, 10:57 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 120

மேலே