கூட்டாஞ்சோறு

அறியாத வயதில்
ஆசையாய் ஒரு கூட்டுசமையல்
இன்முகத்துடன் கலந்து
ஈகை குணத்துடன் பகிர்ந்து
உல்லாசமாய் உண்ணும் ஓர் உணவு
ஊர்கூடி தேருழுக்கும்போது
எங்களின் கைவண்ணத்தில்
ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி
ஐக்கியமாகி உண்ணும் ஓர் உணவு
ஒழுக்கம் நிறைந்த எங்களின் செயல்
ஓங்கி வளர்ந்து எதிர் காலத்தில் நட்புக்கு பாலம் அமைக்கும் ஓர்
சமத்துவ கூட்டாஞ்சோறு....

எழுதியவர் : செல்வமுத்து.M (18-Jan-17, 10:20 am)
பார்வை : 869

மேலே