சமத்துவப் பொங்கல்

சமத்துவமாய்ப் பொங்கலிட வாருங்கள் !
சமுதாயம் நலன்பெறவே வாருங்கள் !
சண்டைகளும் வேண்டாமே நமக்குள்ளே !
சந்ததியும் தழைக்கட்டும் நம்மிடையே !


ஒன்றுபட்டு பொங்கலிட வாருங்கள் !
ஒற்றுமையாய் கூடிநிற்போம் வாருங்கள் !
ஒத்துழைப்பு நல்கிடுவோம் வாருங்கள் !
ஒன்றாகிப் போற்றிடுவோம் வாருங்கள் !


சாதிமத பேதமில்லை சமுதாயத்தில்
சாற்றிடுவோம் எம்மதமும் ஒன்றென்றே !
சகோதர பாசத்தை நிலைநாட்ட
சமத்துவமாய் பொங்கலிட வாருங்கள் !


அன்பினால் அனைவரும் ஒன்றாவோம் .
ஆக்கத்தால் இந்துவுடன் இசுலாமும்
அகிலத்தில் ஒன்றுதானே ! ஏசுவுடன்
அமைதியினால் புத்தருமே ஒன்றுதானே !


வேண்டுவனக் கிடைத்திடவும் வேண்டுமன்றோ ?
மாண்புறவும் வாழ்ந்திடவும் போங்கலன்றோ ?
ஆண்டவனும் அளித்திட்ட நன்கொடையாம் .
மாண்டிடுமா இந்நாளில் சமத்துவமும் .


பொங்கலிடும் நன்னாளில் எல்லோரும்
பங்கிடுவோம் பொங்கலினை சமத்துவமாய் .
தங்கிடுமே இன்பமாக இல்லறமே !
பொங்கிடுமே புதுமையானப் பொங்கலுமே!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (18-Jan-17, 2:12 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 49

மேலே