பொங்கல்

தெருவில் சத்தத்தோடு
செல்லும் இளைஞன்
நியூ இயர் கொண்டாட
பொங்கவில்லை
பொங்கலுக்கான ஜல்லிக்கட்டை
நடத்த சொல்லி பொங்குகிறான்
பொங்கல் நியாயமானது
முடிந்தவரை பொங்கலை
எல்லோருக்கும் ஊட்ட வேண்டும்
பொங்கலின் சுவை
பொங்கும் போது தெரியாது
தேர்தலின் போது புரியும் ..!!

எழுதியவர் : அருண்வாலி (18-Jan-17, 9:19 pm)
சேர்த்தது : அருண்ராஜ்
Tanglish : pongal
பார்வை : 85

மேலே