கொம்பு வச்ச சிங்கம்டா
பெத்த பிள்ளையை பாக்க கூட அயலூரு போகாம ..
வீட்டை ஒரு நாளும் பூட்டி போடாம ..
பக்கத்துக்கு ஊருக்கு பகல் மட்டும் போனா கூட ..
அப்புச்சிய வீட்டு வாசல்ல காவல் வச்சது எதுக்காக ???
வாடி வாசல்ல வளம் வர காளைங்க..
கஞ்சிக்கு காஞ்சுட கூடாதே அதுக்காக ...!!!
வாடி வாசலை எட்டி பார்த்து ...
எப்போ வரும் என்று எதிர் பார்த்து ...
கர்வத்தோட காத்திருப்போம்டா..
எங்க கருப்பு சிங்கத்துக்கு!!!
திமிலை பிடிச்சு அடக்குற திமிருக்கு முன்னாடி ...
கோழைத்தனம் மண்டி இடும் ..
வீரம் மீசை முறுக்கும் ..
பாசம் சீறி சிரிக்கும் ....
தேடி தேடி வாங்குன காயத்தழும்பை
தடவி பார்த்து அவன் சிரிக்க ..
பெருமிதம் அள்ளும் ...
பெருமை பொங்கும் ...!!
வீரமுன்னா என்னனு சொல்லிகுடுக்க உலகமே சொல்ற
உதாரணமே ...
சீரும் காளையை சிறுத்தைகள் அடக்குற ஜல்லிக்கட்டு தானே ...
அந்த வீரத்தை விட்டுட்டு வாழறதுக்கு
எங்க மீசைவச்ச தங்கங்கள் ...
கொம்பு வச்ச சிங்கங்களை ...
அடக்க மட்டும் இல்லை ...
தலைமுறையை தாண்டி ஆண்டுக்கிட்டு இருக்கோம் ...
#கொம்பு வச்ச சிங்கம்டா
-கிருத்திகா.ஜெ