இணையத்தால் இணைந்த தலைமுறை

முகநூலில் மூழ்கிய தலைமுறை
முகவரியை தொலைத்திடும் என்றவருக்கெல்லாம்
முழக்கமிட்டு சொல்லிடுவோம் -எங்கள்
முகவரியை மீட்டெடுத்து
முத்திரை பதிப்போம் என்று!

வாட்ஸ்அப்பில் உலவிய தலைமுறை
வாழ்க்கை வீணாய் போகுமென்று
வருத்தப்பட்டவருக்கெல்லாம்
வாக்கு ஒன்று சொல்லிடுவோம் .- வெற்றி
வாகை சூடியே வீடு திரும்புவோம் என்று!

இணையத்தால் இணைந்த தலைமுறை
இயலாமையை வென்ற தலைமுறை
இனியும் ஏமாறாத தலைமுறை
இதுவே எங்கள் புதிய தலைமுறை.....

த.மணிகண்டன்

எழுதியவர் : தங்கமணிகண்டன் (21-Jan-17, 10:16 am)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
பார்வை : 83

மேலே