நடிப்பு

ஒருநாளின் பெரும்பாலான நேரங்களில்
உன்னை நினைத்து மகிழ்ந்தாலும்
நேரில் காணும் அந்த நிமிடங்களில்
யாரோ ஒருவன் போல் நடித்துவிடுகிறேன்.

எவ்வளவோ நடித்தாலும் - நீ
கடந்து செல்லும் நேரங்களில் என்
கட்டுப்பாட்டையும் மீறி துடித்து
நடிப்பை நகைப்புக்குள்ளாக்கிவிடுகிறது
உனக்கான எந்தன் நெஞ்சம்.

இந்த உணர்வு இழப்பிலா? இன்பத்திலா?
எதில் சேர்ப்பது என்ற குழப்பத்தில்
தவிக்கையில் நீ தாராமல் போன - அந்த
பார்வைகளில் ஏங்கித்தான் போனேன்…

எதற்காக நடித்தேன்?
எதற்காக ஏங்கினேன்?
உனக்கு பிடிக்கவில்லை என்பதாலேயே
உனக்கான உணர்வுகளை
உள்ளுக்குள்ளேயே பூட்டினேன்.
எனது ஏக்கங்களும் நடிப்புகளும்
எத்தனை நாளோ? தொடரட்டும்...

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (24-Jan-17, 11:30 pm)
Tanglish : nadippu
பார்வை : 357

மேலே