எனது எழுத்துக்களின் இலக்கணம்

மைப் பூசி எனை மயக்கிப் பின்
பார்க்க மறுக்கும் அவள் இமைகளையும்

எனக்கு புன்னகைக்கக் கற்றுக்கொடுத்த
பேச மறுக்கும் அவள் இதழ்களையும்

நான் மறந்துவிடாமல் இருக்க வைக்கும்
யாருடனோ அவள் புரியும் அவள் புன்னகையும்

கிள்ளிப் பார்க்க எண்ணவைக்கும்
மலர் போன்ற அவள் கன்னங்களையும்

மென்மையான காற்றில் அலைந்து
நெற்றியில் படரும் அவள் கரு முடிகளையும்

அவள் கைகளால் பின்னப்பட்டு
கட்டுண்ட அவள் கூந்தலின் சடை வளையும்

எதற்க்கென்றே தெரியாமல் நான்
எண்ணிக்கொண்டிருக்கும் அவள் உணர்வுகளையும்

நான் எழுதும் பாடல்களுக்கெல்லாம்
இலக்கணமாய் வைத்தேன்...

இவைகளைத்தவிர்த்து வேறுஎதுவும்
எழுத நான் எண்ணவும் இல்லை..
எனது எழுத்துக்களுக்கு விடுதலை
கொடுங்கள் என்று அவைகளிடம்
நான் கேட்பதும் இல்லை. -அவைகள்
எனக்கு விடுதலை தருவதும் இல்லை...

என்றோ ஒருநாள் அவைகளே நீங்கிவிடும்...
அன்றுவரை வாழ்ந்துவிட்டுப் போகிறேன்
எனது எழுத்துக்களின் இலக்கணங்களுடன்...

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (29-Jan-17, 12:43 pm)
பார்வை : 80

மேலே