மறந்துவிடு மனமே

மறந்துவிடு மனமே


கணவன் கொடூரமானால்
காரிகை என்ன செய்வாள்
கடந்தது எல்லாம் கசப்பாக
நடப்பததாவது இனிமை தேடி அன்பை நாடினால்
காசினி சொல்கிறது -அவள்
நடத்தை கெட்டவளாம்
ஆண் ஆதிக்கம் படைத்த சமூகம் சொல்கிறது
அவள் ஒரு வேசி என்று

அன்பை தேடி பயணிக்கும் உயிர்களில்
பெண் மட்டும் என்ன அந்நியமானவளா?
அவள் உலகத்தில் அன்பு என்ன தடை செய்யபட்ட வார்த்தையா?

ஆண் ஒருவன் நேசித்தால் காதலாம்
அதே
பெண் ஒருத்தி அன்பை யாசித்தால் அது
நடத்தை தவறலா

ஊடங்களும் உலகமும் இதே
பொய்யை சொல்லி சொல்லி
பூமிப்பந்தை களங்கப்படுத்தி வருகிறது

காயப்படுத்தப்பட்ட பெண்மையோ
மருந்துக்காக மூலையில் முடங்கிக்கிடக்கிறது
காயமும் வலியும் அவளுக்கு மட்டும் தானா
இதோ புறப்பட்டுவிட்டது என் கேள்வி
ஏவுகணையாய்
உளுத்து போன சமூகத்தின்
உதவாக்கரை சட்டங்களை தகர்க்க
வன்முறையில்
எனக்கு விருப்பம் இல்லை ஆனால்
வன்முறையை நன்முறையாய் கொண்ட சமூகமே
உன் முறையில் திருப்பித்தருகிறேன் என்பதிலை

பெண்மையின் மென்மையை என்
மனமே மறந்துவிடு

எழுதியவர் : கவிஞர் ச ரவிச்சந்திரன் (29-Jan-17, 1:38 pm)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
Tanglish : MARANTHUVIDU maname
பார்வை : 522

மேலே