பார்வைத் திருடன்
பல நாட்கள் கழித்து
அவளை அறியாமல்
அவளின் ஒரு நொடிகூட
நிலைக்காத பார்வையை!- என்
கண்களால் திருடிவிட்டேன்.
பார்வையைப் பறிகொடுத்த
கவலையும் அவளுக்கில்லை.
“திருடிவிட்டேனே” என்ற
குற்றஉணர்ச்சியும் எனக்கில்லை.
இப்படித் திருடனாகவே
இருந்துவிடவே விருப்புகிறேன்!
பார்வைகளை மீண்டும் மீண்டும்
பறிகொடுக்க அவளுக்குச் சம்மதம் என்றால்.