பெண்ணுக்குள் காதலுண்டா

இதயம் வலிக்குதடி
இமைகள் கணக்குதடி
பாறைக்குள் ஈரமுண்டு
கடலுக்கும் தாகமுண்டு
முட்களுக்கும் மோகமுண்டு
பெண்ணுக்குள் காதலுண்டா?

பேரழகி இல்லையடி நீ
கருப்பி நீ காந்தலழகியடி

பேசும் உன் விழிகளுக்கு
மொழி எதற்கடி?

தேத்துபல் சிரிக்கையில் சிதறாத
ஆண்கள் உண்டோ? முட்கள்

கோபத்தில் சீறும்போதும் துடிக்கின்ற நாசி அழகு

அர்த்தமில்லா வார்த்தைக்கும் அர்த்தங்கள் தரும் குரலழகு

சிலதை சிற்பமே, ஆடைகள்
உன்னில் தனியழகு

காதுமடல் குலுங்க அந்தரத்தில் நாட்டியமாடும் காதணியழகு

கார்கூந்தல் நடுவே நயமாக
உரசும் பூக்கலழகு

மரவளவி மாட்டி அசைந்தாடும்
கரங்கள் மிகஅழகு

அற்புதங்கள் சேர்த்து அசைந்தாடும்
உன் நடையழகு

உன் வாசமது ஈர்க்கும்
என்னாளும் என்னை

என் வாழ்நாள் வசந்தமே
வாய் திறந்திடு

என் கனவுகள் கருகும்முன்
இளமை தேயுமுன்

உன் இதயக்கள்வன் நானென்று
உரக்க சொல்லிடு

நீ என்றும் என்வசமென்று
உறங்க செல்லுவேன்

உன் நினைவுகளின் மடியில்
என்றும் காதலுடன்!

எழுதியவர் : அருண்மொழி (1-Feb-17, 6:20 pm)
சேர்த்தது : அருண்மொழி
பார்வை : 225

மேலே