அழகிய பெண்

சரிந்து விழும் கேசத்தில்
ஒழிந்து விளையாடும் நெற்றி !

காதலும் காமமும்
கலந்து தெளிக்கும் விழிகள்!
மையிட்டு மதி
மயக்கும் இமைகள்!
பொய்யிட்டு புதிர்
போடும் சொற்கள்!
உணர்ச்சிவசப்பட வைக்கும்
உன் உதடுகள் !
ஒளி வீசும்
உன் பற்கள்!
தங்கமும் தவமிருக்கும்
உன் கழுத்தில் தவழ!
தாமரையும் தண்ணீர் நீத்து வரும்
உன் கூந்தலில் அமர!
இன்னுமும் உன் முகம் பார்க்க
என் கவி தடுமாறும்
மனம் தடம் மாறும்!!!!

எழுதியவர் : விக்னேஸ் (5-Feb-17, 1:44 am)
சேர்த்தது : விக்னேஸ்
Tanglish : alakiya pen
பார்வை : 8865

மேலே