என் காதலே

என் நிலவும் நீதானே
என் கனவும் நீதானே
காற்றை போலவே
மனதை தொட்டு செல்வதேன்??

என்னை தொலைக்கிறேன்
கொஞ்சம் உன்னை தேடியே
மீண்டும் கிடைக்கிறேன்
நீ வந்து போகவே //

கண்கள் தேடிடும் அழகு நீயடி
நிலவுகூட விண்மீன்தானடி
மௌனம் கலைத்து ஒரு வார்த்தை சொல்லடி
சம்மதம் கொண்டு நீ என்னை வெல்லடி...

எழுதியவர் : ருத்ரன் (6-Feb-17, 9:55 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : en kaathale
பார்வை : 389

மேலே