அடிப்பாவி

எதாவது விசேஷத்துக்கு கெளம்பறப்ப... நான் எந்த சர்ட் போட்டுட்டு வந்தாலும் என் Wife...

" ஐய்யே... இத ஒரு சட்டைனு எடுத்து மாட்டிட்டு வர்றீங்களானு " சொல்லி வேற சர்ட் எடுத்து கொடுப்பாப்ல...

இதுல எதுனா உள்குத்து இருக்குமோ..?!! இது ரொம்ப நாளவே டவுட்டு...

சரி கண்டுபிடிப்போம்...

நேத்து நைட் ஒரு ரிசப்ஷனுக்கு போக வேண்டி இருந்தது...

அதுக்கு என்கிட்ட இருந்ததுலயே... கேவலமான... மிக மிக கேவலமான ஒரு பச்சை சர்ட்டை எடுத்து போட்டுட்டு என் Wife முன்னால போயி நின்னேன்...

என்னை மேலயும் கீழயும் பாத்துட்டு...

" ஓ.. நீங்க ரெடியா... இதோ 5 நிமிஷத்துல நானும் ரெடி.. "

எனக்கு பக்னு இருந்தது...

" நிர்மலா... இந்த சர்ட் இருக்கட்டுமா..? வேற மாத்திக்கட்டுமா..?! "

" இல்லல்ல.. இதே ஓ.கே.. "

( இது ஓ.கேவா..?!! )

" நிஜமா சொல்லு.. இந்த சர்ட் நல்லாவா இருக்கு..? "

" நான் என்னிக்கும் சர்ட் நல்லா இருக்கானுல்லாம் பாக்க மாட்டேன்.. எனக்கு மேட்சிங்கா இருக்கானு மட்டும் தான் பார்ப்பேன்... "

( அடிப்பாவி...!! )

" சரி நான் போட்டு இருக்கறது பச்சை சர்ட்... நீ கட்டியிருக்கறது ரெட் சேரி.. இதுல என்ன மேட்சிங்கு..?!! "

" தோ.. பார்டர்ல ஒரு பச்சை லைன் வர்ல.? "

" கரெக்ட்டு கரெக்ட்டு.. "

# வாழ்க்கைங்கறது ஒரு மெல்லிசான பச்சை கோடு.. அவ்வ்வ்வ்.....

எழுதியவர் : செல்வமணி (6-Feb-17, 9:59 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 533

புதிய படைப்புகள்

மேலே