முனியம்மா - வீட்டுக்காரி-முனியம்மா உரையாடல்- சிந்திக்க, சிரிக்க

வீட்டுகார அம்மா (வேலைக்காரி முனியம்மாவைப் பார்த்து): ஏண்டி முனியம்மா
நீ என்னமோ வேலைக்காரி சமுன்னு ஒண்ண ஆரபிக்க
போவதா , அடுத்த வீட்டு வேலைக்காரி ஜோதி சொல்லிண்டு
அலையறா , இதெல்லாம் என்ன எதுக்குடி இந்த சங்கம்
கிங்கமெல்லாம் கிறுக்கி, வந்தோமா வேலைசென்ஜோமானு
போவியா அதை விட்டுட்டு ,,,,,,,,,,,,,,,,,,,,,போடி, போடி...........

முனியம்மா : அம்மா நீங்க படிச்சவங்க, நாலு விஷயம் அரிஞ்சவங்க
நீங்க இப்படி பேசலாமுங்களா............

இந்த வேலைக்காரி வர்க்கத்துக்கு யாருங்க காப்பாளரு
சொல்லுங்க..... தேனீ மாதிரி கலைமேலேந்து அந்தி சாய்ரா
வரிக்கும் ஓடா உழைப்புங்க .........சம்பளம் அவங்க அவங்க
என்னத்துக்கு கிடைக்குது, எங்களுக்கு இவளவு சம்பளம்
கொடுக்கணும்னு அரசாங்கம் கூட சொல்லலையே .......
உழைப்புக்கு எத ஊதியம் எங்கெங்கே கிடக்குது; அப்பரும்
சம்பாதிச்ச பணத்தை எல்லாமும் தட்டிக்கொண்டு போகிறார்கள்
குடிகார புருஷ மகான்கள் ...............இவர்களை யாருங்க தட்டி
இதுக்கெல்லாம் ஒரு முடிவை கட்ட தான் நான் முயற்சில
இருக்கேன் மா ..................ஒரு வேலைக்காரிக்கு தொழிலாளர்
சங்கம் ஏற்பாடு பண்ண; நான் பாத்து க்ளாஸ் படிச்சவம ..!!!!!!!!!!!!!!!
என்ன சங்க தலைவியா நிக்க சொல்லறாங்க...............!!!!!!!!!!!!!!
நீங்க என்னமா சொல்லறீங்க ................சப்போர்ட் கொடுப்பீர்களா
....................!!!!!!!!!!!!!!!!!


வீட்டுக்காரி : அடியே முனியம்மா பேஷ் பேஷ் , இப்போ தெரிஞ்சிகிட்டேன்
உன்னையும் உன் மனசையும்; உங்க சங்கத்துக்கு என் முழு
ஆதரவு உண்டு தெரிஞ்சிக்கோ ..................
வாழ்க மகளிர் சமுதாயம் ..................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Feb-17, 1:31 pm)
பார்வை : 312

மேலே