எனக்குள் நீ− 2

உன் கருவிழியில்
மான் கோலங்கள்
உன் இதயவழியில்
என் விழிகள்..

அன்பில் அடைபட்டு
நெஞ்சம் தடைபட்டு
என் வாழ்நாள்
உன் பின்னால்...

உடைபட்ட என்னால்
நினைவுகள் தன்னால்
உன்னைதான் தேடின
உன் மேல் காதல் தோன்றின..

தேடிய கண்களுக்கு
தேர்வு வைத்தாய்
இதயத்தில் இடம்
கிடைக்க..

நாட்கள் நடைபோட
காதல் உனைசேர
காத்திருப்பேன்
உன் பதிலுக்காக..

என் விழிகள் சிவந்தன
கண்ணீரில் மிதந்தன
உன் இதயம் கரையுமா
என் வாழ்வில் தீபம் ஏற்ற
உன் கையால் அது எரியுமா...

உன் வருகையில்தான்
நான் உயிர்பிழைப்பேன்
வந்துவிடு ஒருமுறை
உன் மடி சாய்வேன்...

இல்லை மறுநொடியில்
உயிர்பிரிவேன் உன்நினைவோடு
நீ இல்லாத வாழ்வு
இலையில்லா மரம்..

காற்று காணாத உடல்
ஒன்றுமில்லா தேடல்
வாடி விட்ட என் மனதை
பேசி விட்டு கொன்றுவிடு
இல்லை ஒரு சொல் சொல்லிவிடு
எனக்குள் நீயே என் உயிர்
பிரியும் வரை....

எழுதியவர் : சிவசக்தி (8-Feb-17, 8:02 am)
சேர்த்தது : தனஜெயன்
பார்வை : 999

மேலே