விண்ணைத் தாண்டி வருவாயா

தம் கோபக்கனலால்...
மதுரையை எரித்தாள் கண்ணகி
கண்ணே நீயோ என்
மனதை எரித்துவிட்டு செல்கிறாய்...
கோவக்கார கிளியே
கோவைப்பழமாக சிவப்பது ஏனோ...
அரவம் இல்லாத சாலையில்
சாளரம் வழியே உன்னை தேடியே
ஏமாற்றத்தை எண்ணி நகைக்கிறேன்...
கடைக்கண் பார்வைக்காக
காலத்திடம் கடன் வாங்கி
காத்துக்கிடக்கிறேன் கனிமொழியே..
அற்பமாய் எண்ண
வேண்டாம் சிற்பமே...
உன்னை தூரமாய் நின்றே
தூரலாய் ரசித்திடுவேன்....
தாரமாய் நீயும் வந்தால்
தங்கமே உன்னை தாங்கிடுவேன்..!!!

எழுதியவர் : ரஜனி ஆர்த்தி . க (9-Feb-17, 11:43 pm)
பார்வை : 232

மேலே