பாதச்சுவடுகள்

கவிதை
பாதச்சுவடுகள் !

ஒளி பொருந்திய பாதையில்
விழி திறந்து பார்க்கையில்
என்னிலும் உன்னிலும்
நம் நெஞ்சங்களில்
நிலைத்து நிற்கும்
விரிந்து கிடக்கும்
எண்ண முடியாத
எண்ணிக்கையில்லாத
இனிய பாதச்சுவடுகள் !

‘அன்புதான் இன்ப ஊற்று’
‘ஆசையே துன்பத்திற்கு காரணம்’
எப்போதும் எப்பொருள் மீதும்
ஆசைப் படக்கூடாது
நித்தமும் ஆசைப்பட்ட
புத்த பகவானின் பாதச்சுவடுகள் !

சத்தியாக்கிரகம் அஹிம்சையினை
நித்தியமாக சத்தியமாக கடமையாக
முத்திரை பதித்து-வாழ்வில்
சத்தியசோதனை தந்த
காந்தியின் பாதச்சுவடுகள் !

அறஞ்செய்ய விரும்பு
ஆறுவது சினம்
வீதிதோறும் உலக நீதி
ஆத்திச்சூடி கொன்றைவேந்தன்
விநாயகர் அகவல் அருளிய
ஒள்வையின் பாதச்சுவடுகள் !

‘உயிர் இரக்கமே
மோட்ச வீட்டின் திறவுகோல்’
‘வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம்
வாடினேன்’ வாழ்ந்து காட்டிய
வள்ளலாரின் பாதச்சுவடுகள் !

ஆன்மீக மனிதநேய விதைகளை
அங்கு எங்கெங்கான்தபடி
எங்கும் விதைத்து
அமெரிக்கா மண்ணில்
ஆழப்பதிய வைத்து
உலகமே பாரதத்தை
திரும்பி பார்க்க வைத்த
நம்முடைய வீரத்துறவி
விவேகானந்தர் பாதச்சுவடுகள் !

‘இளைஞர்களே கனவு காணுங்கள்’
இந்தியாவின் எதிர்காலம்
இளைஞர்கள் கையில்
நம்பிக்கையுடன் முழக்கமிட்ட
அப்துல்கலாம் பாதச்சுவடுகள் !

காலத்தால் அழிக்கமுடியாத
கனவிலும் நினைவிலும்
நிலைத்து நிற்கும்
எத்தனையோ அத்தனையும்
தொடர முடியாதபடி
வானம்போல் விரிந்த
என்னிலும் உன்னிலும்
எண்ணமுடியாமல் தொடரும்
இனிய பாதச்சுவடுகள் !



பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (11-Feb-17, 10:28 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : pathachuvadugal
பார்வை : 161

மேலே