அவனில் அவள் _ அவனால் அவள் ❤

மதகஜ ராஜ்ஜியம் அவனில் மது சொட்டும் மகிழம் அவள் ..
முல்லையின் மனம் வீசும் பாரியின் பாவை அவள் ..

ஆகாய தாமரையில்_ கதிர் வீச்சும் கதிரவன் அவன் ..
அல்லியின் ராணிக்கு_ அப்சரஸ்சின் அண்ணன் அவன் ..

இவன் கண்கள் அவள் நோக்க
புவியெல்லாம் பூத்ததே
இமை அசையும் வேளையில்_தம்
இதழ் இரண்டும் சேர்ந்ததே !

இவள் சினுங்க அவன் இழுக்க
செவ்வானமும் சிவந்ததே !!
மலர் மயங்கும் வேலையில்_தம் மனமிரண்டும் துளைந்ததே ! 💕

_கிறுக்கி

எழுதியவர் : Kanmani Srinivasan (13-Feb-17, 1:12 am)
சேர்த்தது : கண்மணி சீனிவாசன்
பார்வை : 234

மேலே