சிப்பிக்குள் ஒளிந்திருக்கும் புன்னகையே சுவாசமாய் நீ வருவாயா - புதுக்கவிதை

சிப்பிக்குள் ஒளிந்திருக்கும்
புன்னகையே ! ஆழ்கடலின்
முத்தாக , ஓதுகின்ற
திருமறைகள் காதல்கீதம்
பாடியதோ ! வெளிவரவும்
வெட்கமோ ! நாணமோ !
நான் அறியேனடி !


உலகமெனும்
வட்டப்பாதையில்
சுற்றிச் சுற்றி
வந்தேன் !
உன் சிரிப்பொலியின்
ஒலி கேட்டு
சிக்கித் தவித்தேன் !



இணைகரமாய்
இணையத் துடிக்கும்
இன்முகன் நான் !
முக்கோணப் பாதையில்
உன் மூச்சுக்
காற்றை சுவாசித்தேன் !



சதுரப் பாதையில்
சங்கீதம்
பாடி வந்தேன் !
செவ்வகப் பாதையில்
உன் வருகைக்கு
செந்தாமரைப்
பூ வைத்தேன் !



நாற்கரப் பாதையில்
நாளெல்லாம்
தவமிருந்தேன் !
சின்னச்சின்னப்
பாதையிலும்
உன்னைக் காணாமல்
சிறக்கொடிந்தப்
பறவையாய் சிக்கித்
தவிக்கின்றேன் !



நிறம் தரு வேற்றுமை
நித்தமும் காதல் !
குருதியின் நிறமே
காதலின் நிறமாம் !
இதயத்தின் உள்ளே
காதல் என்றால்
அதைப் பிளந்து பார்க்கும்
கூர்முனை அம்பு !
மன்மதன் மலர்க்கணை !



அம்பு தந்த அழுத்தத்தால்
பெருகி ஓடும் குருதி !
இதயத்திலிருந்து
திசுக்களுக்காய் ஓட்டம்
பாய்ந்து உயிரில் கலக்கும்
காதலின் நிறமே !
உன்விழிப் பார்க்க
உன் அடிமை ஆனேன் !
என் சுவாசமாய் நீ வருவாயா !!!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (14-Feb-17, 6:19 pm)
பார்வை : 63

மேலே