அந்த சில பெண்கள்
அதோ அந்த பெண்கள் வருகிறார்கள்!!
அவர்கள் சாத்தானின் நேரடி வாரிசுகள்!!!
பல ஆதாம், ஏவாள்களின் பிரிவில்.........
இவர்களின் நாவுக்கே பெரும் பங்கு !!!
சிரித்தப்படியே விசம் கக்கும்
வித்தை கற்றவர்கள்!..
அட என்ன நகை போட்டுருக்காங்க!!
எங்க பையனுக்கு இருக்கிற திறமைக்கு??!!!
இப்படி நீளும் வார்த்தையில் கண்டிப்பாய் -
ஒரு பிரளயம் நிச்சயம்!!
இப்பவும் பெண் குழந்தையா???
என ஆரம்பித்து
அப்பவே நினைச்சேன் .!!!!
வசந்தி மகள காணாமாமே? --என
முடிவில்லாமல் தொடரும்..............!!!!
.எச்சரிக்கை!!!
இவர்கள்
உங்கள் வீட்டுக்குள்ளும் வரலாம்!...........!!!!