தேடியலையும் ஒரு சொல் -சந்தோஷ்

மிக மிக மிக கூர்மையான
ஒரு சொல்லை
தேடியலைகிறேன்..!

அந்த சொல்...
பிஞ்சுகளை வதம் செய்த
ஆண் குறிகளை வெட்ட வேண்டும்.

அந்த சொல்
ஜனநாயகத்தின் மாண்பை தீண்டும்
தலைகளை வெடிக்கச் செய்யவேண்டும்.

அந்த சொல்
இலக்கியம் இலக்கியம் என
பொய் சமூககோபமிடும்
கயவர்களை தூக்கிலிடவேண்டும்.

அந்த சொல்.....
யாவற்றுக்கும் தீர்வாக
தீர்த்து கட்டுவதாக இருந்திட வேண்டும்...
அந்த சொல்
அந்த சொல்....
அதே சொல்...வேண்டும்.. வேண்டும்...!

**

-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார். (20-Feb-17, 11:21 pm)
பார்வை : 99

மேலே