நல்லதோர் உலகம் செய்வோம்

நேசமுள்ள நெஞ்சங்களே...
பாசமுள்ள எனதன்பு சகோதர, சகோதரிகளே....
ஞானில மக்களே...
வாரீர் புதியதோர் உலகம் செய்வோம்....

கண்ணியம், கட்டுப்பாடு, உண்மை, உழைப்பு என்றே அறிஞர்கள் பலருரைத்த உயரிய தத்துவங்களை நம் வாழ்க்கை நடைமுறையாக்குவோம்....
வாரீர்....

திட்டமிட்டே திருடிடும் திருடர்களின் திருட்டுத்தனம் ஒழித்தே நல்லதோர் சமுதாயம் காண வாரீர்....

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை புரியும் வஞ்சகர்களின் வன்மம் அழித்தே, கள்ளமில்லாத அன்பை கணக்காக விதைத்து,
வளர்த்திட வாரீர்....

பெண்கள், குழந்தைகள் போன்றோர்களை அசிங்கப்படுத்தும் ஆபாசப்படமெடுக்கும் நயவஞ்சகரின் கதைமுடித்தே ஒழுக்கநெறியை வழிமொழியும் திரைபடமெடுத்து, சமுதாயத்தைக் காத்திட வாரீர்.....

லாபம் வந்தால் தனக்கென்றும்,
நஷ்டம் வந்தால் பிறருக்கென்றும் எண்ணும் கொடிய மனதிலே நல்ல குணங்களை விதைத்து,
சக உயிர்களின் உணர்வுகளைப் புரிந்து நடக்கும் நல்ல குணங்களை விதைத்து,
மனிதநேயம் போற்றிட வாரீர்....

விலங்கினங்களிடம் இருந்து மனிதனுக்கும் வித்தியாசம் உண்டென்பதைப் பறைசாட்டும் புதியதோர் நடைமுறை வாழ்க்கை காவியம் படைத்திட வாரீர்....

புதியதோர், நல்லதோர் உலகத்தின் தொடக்கமாக நாம் அமைந்திடுவோம்... வாரீர்.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (21-Feb-17, 8:17 am)
பார்வை : 764

மேலே