பக்கத்து உறவுகள்
என் பால்ய கால நினைவுகளில்!
பசுமையாய் துளிர்க்கிறது!
என் பக்கத்து உறவுகள்!
கொத்தமல்லிக்காகவும்,
தக்காளிக்காகவும்,
அல்லது காரணமே இல்லாமலும்
அடிக்கடி நிகழும் பக்கத்து வீட்டிற்கு
என் குட்டிப்பயணங்கள்!...
என் வீட்டில் கரண்ட் இல்லையெனில்!
அவசரமாய் அவர்கள் வீட்டு முற்றத்தையடையும் என் கால்கள்...!!!
என் அம்மாவின் வடித்த சாதமே போதுமானது!
எதிர் வீட்டு மாமியின் வத்தக்குழம்போடு..
அக்பர் மாமா வீட்டு மீன் குழம்பும்
என் டிபன் பாக்சை நிரப்பும்!!!
என் வீட்டுப்பாடங்கள் யாவும்,
சங்கர் அண்ணா,
ஜான் அண்ணா மற்றும்
பாத்திமா அக்காவினால் முடிக்கப்படும்!
இன்று காலசக்கரத்தில் சிக்கி
கணிணி பொறியில் நசுக்கப்பட்டு!
கல்வி ஏலத்தில் விற்கப்பட்டு!
எம் இளர் தளிர்கள்! மூடிய கதவுகளுக்குள்..!
மூர்ச்சையாகின்றன!!
இதோ கதவுகளை திறந்து விடுங்கள்!
கணிணியில் எலி பிடித்தது போதும்!
பச்சை குதிரையேறட்டும்!
மேடு பள்ளம் தாண்டட்டும்!
ஜாதி, மதங்களை கடக்கும் சூட்சம பாலம்!!!
இளமையின் நட்புக்குள்ளேதான் ஒழிந்துக்கிடக்கிறது!!!
முதலில் பக்கத்து உறவுகளை இணைப்போம்!
பிறகு பக்கத்து மாநிலம்,
பக்கத்து நாடு என விரிவடைவோம்!!!