வாருங்கள் தியானம் செய்வோம்
கண்களை மூடு!!!
புலன்களை அடக்கு!!!
உணர்வுகளை தக்க வை!!!
தொடுவதில் கவனம் வை!!!
உன்னை சுற்றி வரும் ......
சத்தங்களில் நிலை நிறுத்து!!!
அப்படியே யோகா வகுப்புக்கான
தொகையை ஆன் - லைனில் செலுத்து!!!!!!!
இது யாவும் கடினமெனில்!!
கண்ணாமூச்சி விளையாடு!
ஆம்
இவ்விளையாட்டில் மட்டுமே
மேல் உள்ள யாவும் சாத்தியம்!!!
தமிழனின் விளையாட்டு!!!
வெறும் விளையாட்டு அல்ல!
அவையாவும் ஒர் வாழும் யோகா!
தியானத்தின் அடிப்படை!!!
உணர்வோம்!!!
நம் இளம் சந்ததியினை .......
விளையாட ஊக்குவிப்போம்!!!