இப்படியாக எல்லாமே

இலவச அரிசி,
இலவச மிக்சி, மின்விசிறி
பள்ளி மாணவர்களுக்கு
கல்வி பொருட்கள்
இலவச வீட்டு மனை பட்டா....

இப்படியாக எல்லாமே
இலவசமாக எங்களுக்கு வேண்டாம்
வேண்டும் எங்களுக்கு.....

எங்கள் உழைப்பை
மதிக்கத் தெரிந்த அரசு...
எங்களுக்கு தேவை...

உழைத்து களைத்து வரும்
எங்களுக்கு மின்சாரமும்
குடிநீரும்..

மற்றபடி எங்கள்
தேவைக்கு உழைப்பதற்கு
குடும்பத்திற்கு சம்பாதிக்க
எங்களுக்கு தெரியாதா?

எதற்கு இலவசம்?

எழுதியவர் : சாந்தி ராஜி (24-Feb-17, 10:14 pm)
Tanglish : ippadiyaaga ellaame
பார்வை : 275

மேலே