நான் புதிதல்ல

நீ விரல்களை  காற்றென
மாற்றியதில் என்
சுவாசப்பைகளெங்கும்
சுகமான வருடல்

முத்தமிட்டாய்
மிட்டாய்கடையில்
இறக்கை இழந்த ஈயென
உன்னில் ஊரத்தொடங்கிற்று
என் காமம்

மலைக்கூரின் நிழலில்
கிழியும் வெப்பமாய்
உன் காதலில் தோற்றது
என் காமம்

என் ஆண்டுகள்
சேமிப்பிலிருந்து ஒழுகியதில்
காலத்தீயின் விறகென
உன் தேகம் எரிந்து கரைந்தது

என் என்னுள்
நானே அன்னியமானேன்
நீ மெய்யின் பொய்யென
சிரித்த மிருகங்கள் மொழிந்தன

அடுத்த காதலொன்றும்
அவ்வளவு கடினமல்ல
ராமனின் நகலெனவும்
நானல்ல

நீ கிடைப்பாய்!
என்றேனும்
உயிரின் வேர்களெங்கும்
உயிரோடியது நீதானே

அப்பிள் தோலாய்
இரவுகளை இழைத்தேன்
சூரியவர்ணங்களை போர்த்த
இது போதும்

எழுதியவர் : அர்த்தனா (24-Feb-17, 11:16 pm)
Tanglish : naan puthithalla
பார்வை : 152

மேலே