எழுந்து நட

துணிந்தவனுக்கு தோல்வி இல்லை
நிமிர்ந்தவனுக்கு பயமில்லை

உயர்ந்தவனுக்கு இரக்கமில்லை
தாழ்ந்தவனுக்கு உயர்வில்லை

வீழ்ந்துகிடப்பவனுக்கு வாழ்க்கை இல்லை
எழுந்துநடப்பவனுக்கு வாழ்க்கையில் எல்லையே இல்லை

சூழ்ந்தவனுக்கு சுதந்திரமில்லை
பணிந்தவனுக்கு விடுதலை இல்லை

நொந்தவனுக்கு வறுமை தொல்லை
தந்தவனுக்கு தர்மம் இல்லை

சொந்தக்காரனுக்கு சுகமும் இல்லை
பந்தகாரனுக்கு பாசமும் இல்லை

உழுதவனுக்கு ஊதியமில்லை
அழுபவனுக்கு வைத்தியமில்லை
சிரிப்பவனுக்கு எந்த வியாதியும் வருவதில்லை

எழுதியவர் : தமிழ் செல்வன்.ஏ (1-Mar-17, 8:21 am)
பார்வை : 85

மேலே