ஒற்றுமையே பலம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வென
வாசித்தவையும் வாய்மையன்றோ !
உரைத்ததும் பொய்யல்ல
உணர்ந்திட்டோம் ஏறுதழுவலில்
உணர்த்திட்டோம் உலகிற்கே ...
இணைந்தே இருந்தால்
இவ்வுலகை வென்றிடலாம்
இதயங்கள் அறிந்திடுக
இவ்வழி நின்றே செயல்படுக ...
வெறுமென வந்த நமக்கும்
சாதிமதமென பிரிவினை எதற்கு ?
பிதற்றுகின்றன உள்ளங்கள்
சச்சரவுகள் தொடர்கின்றன
இல்லாத ஒன்றைக் கூறியே ....
உணர்வுகள் ஒன்றினால்
உள்ளங்களும் இணைந்திடும்
விருப்பங்கள் மாறுவதனால்
விவாதங்கள் கூடுகிறது
தீர்வொன்றும் காணவில்லை ...
பலத்தைப் புரியாதோர்
பலவீனத்தால் பிரிவது கண்கூடு ..
ஒற்றுமையே பலமென்பதை
ஒன்றுகூடி சிந்திக்காமல்
வேற்றுமையால் சிதறுண்டு
வேறினத்தின் அடிமைகளாய்
அலைகின்றார் நாட்டிலே ....
உரைத்திட்டும் உரைக்காமல்
உணராத நெஞ்சங்கள் பலரிங்கு ..
உண்மையென அறிந்தோரும்
உள்ளவரை ஒன்றிணையாமல்
உலாவரும் அவலமே அகிலத்தில்
ஒன்றிடுவோம் இனியேனும்
வென்றிடுவோம் தரணியில் ...!
பழனி குமார்