ஆதவன் நமக்கு ஜீவாதாரம்

எத்தனையோ கோடி விண்மீன்கள்
நீல வானமாம் பேரண்டத்தில்
நித்தம் சுழன்று வருகின்றன -அவற்றில்
நம் கண்ணிற்கு புலப்படுபவை சிற்சிலவே

இந்த பிரபஞ்சத்தில் நாமறிவோம்
அதன் பால்வெளி அண்டத்தில்
ஆதியெனும் விண்மீன் அதன்
பரிவாரங்கள் ஒன்பது கோள்கள்
அத்தனையும் தன்னையே சுற்றிவர
நம்மையும் ஆட்டிப்படைக்கும்
கோள்களாய் யுக யுகமாய்
வலம் வந்துகொண்டிருக்கின்றன
பஞ்ச பூதங்களோடு உயிரினங்களும்
அண்டி ஒன்றி வாழும் ஒரே கோல்
இதில் நம் பூமி ஒன்றுதான் என்பது
விந்தைதரும் விஷயம் ஆனால்
இன்றுவரை அதுதான் உண்மை

நம் பூமி உட்பட்ட நவகோள்களுக்கும்
நடு நாயகன் ஆதியாம் சூரியனே
அவன் ஒளிகிரணங்கள் இல்லாமல் போனால்
பூமியில் உயிர் இல்லை வாழ்வில்லை
இரவில்லை பகல் இல்லை
மாறி மாறி வரும் காலங்கள் இல்லை
அவனில்லை என்றால் மண்ணிற்கு
மழையும் இல்லை விவசாயம் இல்லை
நமக்கு ஜீவாதாரம் பகலவன் அவன்
அவனுள்ளே அந்த நாராயணன் உள்ளான்
அவன் அவனை இயக்குவிக்க
ஆதவன் சூரிய நாராயணன் ஆகின்றான்
அவன் ஆதி பகவான் ஆவான்

ஆதவனே உனக்கு ஆயிரம் ஆயிரம்
வந்தனங்கள்
நீ நீடு வாழ்தல் வேண்டும்
பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூறாயிரம் ஆண்டு
பரமனே பரிதியே உனக்கு
வந்தனங்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Mar-17, 1:52 pm)
பார்வை : 59

மேலே