ஒருவாய் உணவு

​ஓடிஓடி உழைக்கிறான் மனிதன்
--தேடித்தேடி அலைகிறான் நாளும்
பாடியும் சுற்றுகிறான் சாலைகளில்
--பாவமவன் ஒருவாய் உணவிற்கு !
ஏழைகளின் நிலையே இதுதான்
--பாழும் பிறப்பில் பாகுபாடுதான் !
ஏனிந்த மாறுபாடு மண்ணிலே
--என்றுதான் தீருமோ இந்நிலை !
சுரண்டிப் பிழைப்பவன் உயரத்தில்
--சுழன்று உழைப்பவன் கிணற்றில் !
பட்டினியால் இறக்கிறான் புவியில்
--பட்டம் பெற்றவனும் பாதையில் !
கசிகிறது குருதியும் கண்ணிலே
--பசித்திடும் உயிரைக் கண்டாலே
விடியலும் வந்திடுமா உலகிலே !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (3-Mar-17, 2:42 pm)
Tanglish : oruvai unavu
பார்வை : 202

மேலே