காதலை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா

சில நேரங்களில் சிலர் தங்களுடைய மனதிற்குள் கதறி அழுவதைக் கேட்டும் ஓடிச் சென்று உதவ முடியாத நிலையில் நான் உள்ளேன், எனது அன்னையின் கட்டளையாலே.....

காதல் சிறந்த விடயமென்ற போதிலும்
ஒரு பெண் காதலிப்பவனுடைய குணங்களை ஆராய்ந்தால் அவன் கெட்டவனாகவும், பல பெண்களோடு தொடர்பு கொண்டவனாகவும் இருக்கிறானெனில்,
அதை அப்பெண்ணிடம் தெரிவித்தால் நான் ஏதோ அவளுடைய மனதை மாற்ற பொய் சொல்கிறேன் என்றே எண்ணுகிறாள்.....
என்ன செய்வது??...
காதல் கண்ணை மறைக்கிறது....

காதலுக்காக அப்பெண்ணை அவள் காதலித்தவனோடு சேர்ந்தே வைத்தாலும் அந்தப் பெண்ணின் எதிர்காலம் என்னவாகுமென்ற சந்தேகமே நோகடிக்கிறது....

மனதின் உணர்வுகளை தெளிவாகப் புரிந்துக் கொண்டாலும், மனிதக் குணங்களைக் கண்டுக் காதலிப்பதும் அவசியம் தானே....

காதலிப்பவர்களெல்லாம் திருமணம் செய்வதில்லை...
திருமணம் செய்பவர்களெல்லாம் சேர்ந்து வாழ்வதில்லை.....
சேர்ந்து வாழ்வோரெல்லாம் சேர்ந்தே போவதில்லை.....
ஆக மொத்தம் இந்த உலகில் எதுவுமே நிரந்தரமில்லை.....

காதலை ஆதரிப்பதா??
அல்லது எதிர்ப்பதா???...
என்ற சிந்தனையில் மிகவும் ஆழ்ந்திருக்கிறேன்....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (5-Mar-17, 5:26 pm)
பார்வை : 491

மேலே