மகளிர்

♥♥பெண்♥♥♥

அமுதூட்டி வளர்த்த தாயாய்......

ஈகையின் மகிமையை
இளமையில் ஊட்டிய தமக்கையாய்.....

பெண்மையின் மேன்மையை இயன்றவரை கற்பித்த தோழியாய்......

ஹார்மோன்களை தூண்டிய காதலியாய்......

மனமறிந்து மகிழ்விக்கும் மனைவியாய்.....

என் இறுதிக்காலத்தின் இடையூறு தீர்க்க காலச்சென்ற தாயின் மறுபதிப்பாக மகளாய்......

மனஅழுத்தத்தின்
மருந்தாகும் மழலையாய்....

என்னை ஆணாக அடையாளப்படுத்திய அனைத்து மகளிருக்கும்...

""""இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்"""""
♦♦♦தயா♦♦♦

எழுதியவர் : உலையூர் தயா (8-Mar-17, 2:53 pm)
சேர்த்தது : தயாளன்
Tanglish : makalir
பார்வை : 3641

மேலே