உலக மகளிர் தினம் - மார்ச் 08

உலக மகளிர் தினம் - மார்ச் 08

ஆண்டுதோறும் மார்ச் 8 - ந் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. மார்ச்-8 ம் தேதிக்கும் மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் உழைக்கும் கீழ்த்தட்டு பெண் வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்த பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது.

1789 -ம் ஆண்டு ஜூன் 14 -ம் தேதி பிரெஞ்சு புரட்சியின் போது பாரிசில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். இந்த செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிட அங்கும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுவில் இடம்பெறச் செய்யவும், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 -ம் ஆண்டு மார்ச் 8 -ம் நாளாகும். அந்த மார்ச் 8 -ம் நாள் தான் மகளிர் தினம் என உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.

1857 -ல் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். இதனால் அமெரிக்கா முழுவதும் கிளர்ந்தெழுந்த பெண் தொழிலாளர்கள் 1857 -ம் ஆண்டு மார்ச் 8 -ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். இதை தொடர்ந்து டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் 1910 -ம் ஆண்டில் பெண்கள் உரிமை மாநாடு நடைப்பெற்றது. இந்த மாநாட்டில் கலந்துக்கொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் மாதம் 8 -ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் போனது.

இதையடுத்து, 1920 -ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா கேலன்ரா கலந்து கொண்டார். அவர்தான் உலக மகளிர் தினத்தை ஆண்டு தோறும் மார்ச் 8 -ம் தேதி நடத்தவேண்டும் என்று பிரகடனம் செய்தார்.

இதையடுத்து, 96 ஆண்டுகளுக்கு முன்பு 1921 -ம் ஆண்டில் உலக மகளிர் தினத்தை கொண்டாட தொடங்கினர். அன்று முதல் இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 -ம் தேதியை நாம் உலக மகளிர் தினமாக கொண்டாடி வருகிறோம்.

நன்றி: தினத்தந்தி

ந தெய்வசிகாமணி

எழுதியவர் : ந தெய்வசிகாமணி (10-Mar-17, 9:34 pm)
சேர்த்தது : ந தெய்வசிகாமணி
பார்வை : 380

மேலே